ஒரு வாரமா சந்தோஷமா இருக்கேன் .எதுக்கு சந்தோஷமா இருக்கேன்னு கேட்டீங்கன உங்க வீட்ல பாயசம் வைச்சு பக்கத்துக்கு வீட்ல எல்லோருக்கும் குடுப்பீங்க ..,ஆமாங்க என்னோட போன
பதிவுக்கு மட்டும் மொத்தம் 45646 கமெண்ட் வந்திருக்கு அப்படியே இன்ட்லில என்னோட பதிவ பாராட்டி மெயில் அனுப்பிசிருகாங்க ..,கூடவே நேத்து ஒரு பிளான்க் செக் , சிக்நேச்சர் கூட இல்லாம அனுபிச்சு பாராட்டியிருக்காங்க
தமிழ் நாட்டு நியூஸ் பேப்பர் எல்லாம் என்னோட பேட்டிக்கு காத்துண்டு இருக்கு .நேத்து என்னக்கு பாராட்டு விழா நடத்துறதுக்கு தேதி கேட்டு போயிருக்காங்க ..,நானும் டெல்லி ல ஒரு மீட்டிங் இருக்கேன் அப்புறம் பேசுறேன்னு சொல்லி அனுப்பிசிடேன் .இன்னிக்கு காலையிலே ஷாருக்கான் என்னோட அடுத்த படத்துல நீங்க தான் சார் ஹீரோவா நடிக்கணும் நான் செகண்ட் ஹீரோவா வந்துடுறேன் சொல்லி ரொம்ப அடம்பிடுச்சாறு ...,சரி டேட் பிக்ஸ் பண்ணி சொல்றேன் சொல்லி அனுபிச்சிடேன்..,ஆனா அவரு கண்ணிமாராவுல ரூம் போட்டு டேட் வாங்கி தான் மும்பை போவேன்னு இருக்கிறாம் ..,ரஜினி என்னை ரோபோ பார்ட் 2 வுல நடிக்க சிபாரிசு செய்ஞ்சு இருக்குராரம் ஷங்கர் கிட்ட ...., ஆனா
*
*
*
*
இந்த மேட்டர் எல்லாம் தெரிஞ்ச சிரிப்பு போலிசு என்னை மனதளவில பாதிக்க படுற கமெண்ட் போட்டு என் வளர்ச்சியை தடுக்க பார்க்குது ..,
ஆனா நாங்க யாரு வீட்ல செய்ஞ்ச மைசூர்பாக்க குக்கர்ல ரெண்டு விசில் விட்டு தின்னவங்க நாங்க ( அம்மா அடிக்காதீங்க )..,அவ்ளோ உஷாரா இருப்போம் ...,யோவ் சிரிப்பு போலிசு உன்னோட பாச்சா எல்லாம் பலிக்காதுயா ...,என்னோட தங்க தளபதி டெர்ரர்..., தீக்குளிக்க தயார் தலைவா நீ ஊ ன்னு சொல்லு அந்த ரமேஷ இல்ல நானா பார்த்துட்டு ஒரு முடிவுக்கு வருவோம்னு சொல்லிட்டு எண்ணெய் தேச்சு குளிக்க போயிருக்கான்.என்னை எதிர் பதிவு திலகம்னு மத்திய அரசு ஒரு விருது கொடுக்குது ...,நான் தான் வேணாம்னு சொல்லிட்டேன் ..ஏன் தெரியுமா இங்க விருத திருடுற பன்னாடைங்க ஜாஸ்தி ..,அதான் அப்புறமா என்னோட ஷெட்டுலே பார்த்துட்டு வாங்க வரேன்னு லெட்டர்பாட்ல ஜனாதிபதிக்கு அனுபிச்சிடேன்
ரமேஷ் (எ )சிரிப்பு போலிசு...,என்னக்கு சேர்ந்த கூட்டம் ,பட்டம் ,பதவி ,பாராட்டு விழா ,எல்லாம் நானா கேட்டது இல்ல எல்லாம் தானா சேர்ந்தது ...,இந்த நரி காக்ககிட்டவே வடையை திருடி தின்ன நரி ,உன்னோட வேலையெல்லாம் வேற யாருகிட்டேயும் வைச்சுகாதே வர்ட்டா ...,
டிஸ்கி : அந்த இன்ட்லி மெயில் பார்க்கணுமின நீங்க என்னோட மெயில் ID க்கு வாங்க ..,மெயில் id : பணங்கட்டுநரி@ஜிமெயில்.காம் ..,பாஸ் வோர்ட் : அகாரா புக்காரா ..,.