தளத்தை பற்றி

இது பனங்காட்டுநரி எந்த சலசலப்புக்கும் சலனபடாது ...,ஊ ஊ ஊ

இந்த ஓசி ப்ளாக் ஸ்பாட்டுக்கு வந்திருக்கும்,வாசக பெருமக்களே ,இலக்கிய ஆர்வலர்களே ,இனிய தமிழ் மக்களே மேலும் என் உயிரினும் மேலான என் ரத்தத்தின் ரத்தங்களே (பயங்கர கைதட்டல் )..,இந்த தளத்தில் நொந்னை பேச்சு எல்லாம் பேசப்டாது ..ஏன்ன ப்டாதுன்ன ...,ப்டாது..,வந்தீங்களா ஜாலியா படிச்சிட்டு போய்ட்டே இருங்க ...,இல்லன என் நண்பன் ( குரங்கு )வைத்து சுட்டு புடுவேன் ஹா ஹா ஹா .

ஓகே ஸ்டார்ட் கும்மி ..., .

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

சாதி வாரி கணக்கெடுப்பு -மத்திய அரசு

முஸ்கி : இது என்னக்கு ஆறு மாதத்துக்கு முந்தி வந்த ஒரு S M S,,அதை இப்போ இருக்கிற சூழ்நிலைக்கு ஏற்ப மாத்தியுள்ளேன் ...,



நம்ம மன்மோகன் சிங்க் அமெரிக்கா போறாரு ..அங்கே இரு நாட்டு நல்லுறவே பேணிகாப்பதற்காக ஒபாமா உடன் பேச்சு நடத்துறாரு ..அப்போ நடந்த சம்பாஷனைகள் இதோ .....

ஒபாமா : Mr .சிங்க் எப்படி இருக்கீர்கள் ...,உங்கள் நாட்டின் வளர்ச்சி பிரமிக்க வைக்குது !!!!!!!

சிங்க் : ஹி ஹி ஹி ...தாங்க்ஸ் ஒபாமா ..இப்போ கூட நாங்கள் விண்வெளிக்கும் ,நிலவுக்கும் ஆட்களை அனுப்ப போறோம்

ஒபாமா : அப்படியா வெரி குட் ! வெரி குட்!!!! ....,உங்களுக்கு எதுனா உதவி தேவைன்னா மறக்காம என்கிட்ட கேளுங்க அமெரிக்க செய்யும்

சிங்க் : ஹி ஹி ஹி .... தாங்க்ஸ் ..

ஒபாமா : ஆமா ..எத்தனை பேரை நிலவுக்கு அனுப்பபோறீங்க?

சிங்க் : OC : 07 , OBC : 2 , SC : 2 ,ST :2

ஒபாமா : தக்காளி இவனுங்க திருந்த மாட்டனுங்க !!!



புதன், 11 ஆகஸ்ட், 2010

சில மனிதர்கள் எனும் மிருகங்கள்

சில வருடங்களுக்கு முன் நான் கிண்டியில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தேன் .அங்கு சேர்ந்த முதல் நாளில் இருந்தே என்னக்கும் எங்கள் மானஜெருக்கும் ஒரே லடாய் தான்.அவர் என்ன சொன்னாலும் அதன்படி தான் செய்ய வேண்டும் ..சிறிது மாற்றி செய்தாலும் போச்சு ..உன்னோட அனுபவம் என் வயது என்று சொல்லி திட்டுவார் ...,நான் எப்பொழுதுமே எங்கு சென்றாலும் ஒரு வேலையை கற்று கொண்டு,பின் என்வழியில் அதை சுலபமாக மாற்றி கொள்வேன் ..அதை மற்றவர்களுக்கும் சொல்லிகுடுபேன் ...,இது அவர்க்கு தெரிந்து CONTROL PLAN ல என்ன சொல்லியிருக்கோ அதன் படி செய் ...,என்னடா இது பெரிய லொள்ளா இருக்கே சொந்தமா சிந்திக்கவே விட மாற்றங்களே என்று நொந்து கொண்டு வேலைக்கு சென்று வந்தேன் .

ஒரு நாள் காலை மேனேஜர் குபிட்டு ..அடுத்த மாசம் ஆடிட் வராங்க ..PROCESS டாகுமென்ட் எல்லாம் ரெடி பண்ணி வைக்கணும் ..டாகுமென்ட் எல்லாம் PREPARE பண்ணனும் என்று ஒரு மூணு பேரை நியமித்தார் ...,சரி இனிமே இந்த ஆளு தொல்லை இருக்காதுன்னு ..ரொம்ப SINCEIRA வேலை பார்த்தேன் ..நான் வேலை பார்ப்பதை பார்த்து எனக்கு INCENTIVE எல்லாம் அந்த மூதேவி குடுத்தது....காலைல ஆறு மணிக்கு போவேன் ..இரவு பத்து மணிக்கு தான் வீட்டுக்கு வருவேன் ..தூக்கம் வெறும் ஏழு மணி நேரம்தான் ...இது மாதிரி ஒரு மாதம் ரொம்ப SINCERA வேலை பார்த்தேன் ...

ஆடிட்கு ஒரு நாள் முன் என்னுடுய வேலையெல்லாம் பக்காவாக முடித்து பஸ் ஸ்டாண்டில் நின்ற போது என்னுடன் பணியாற்றிய ஒருவர் ,'''சார் உங்க டீமில் வேலை பார்த்த ஒருவர் செய்த அத்தனை வேலைகளையும் யாரோ COMPUETERIL DELETE செய்து விட்டார்கள்.அவர் ஒ வென்று அழுகிறார்கள் போய் பாருங்கள் என்று சொன்னார் ''..என்னடா இது தலை வலியா போச்சேன்னு பார்த்தா ஒரு பெண் ஊழியர் அழுது கொண்டின்ருந்தார் ...,என்னக்கு பகீரென்று வந்தது ..ஏனென்றால் அவர் செய்த வேலையெல்லாம் ஒரு நாள்ள செய்ய முடியாது ..அந்த மூதேவி(மேனேஜர் ) என்னதான் திட்டும் ..என்னடா பண்றதுன்னு பார்த்து அந்த பெண்ணை வீட்டுக்கு அனுபிச்சு BACK UP எதுனா இருக்கா பார்க்கலாம் என்றால் ....,DELETE பண்ணவன் தவம் மாதிரி அதை செய்திருக்கான்...இரவு பத்து மணிக்கு மனஜேருக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லி அவன் கிட்ட திட்ட வாங்கி ,ஒரு பீர உட்டு வீட்டுக்கு வந்தேன் ...,மறுநாள் ஆடிட்,நான் ஆடிட் வந்தவங்கள பார்த்ததும் நான் கவலையே படலை ..ஏனென்றால் அந்த ஆடிட் டீம் ஹெட் என் CLOSE FREIND ...,அவன் கிட்டே விஷயத்தை சொல்லி விடேன் .அவன் பரவாயில்லை விடு நான் பார்த்துகிறேன் என்று சொல்லி,'''02 NON CONFIRMATION REPORT ''' மட்டும் குடுத்துட்டு போய்ட்டான்.எல்லாருக்கும் சந்தோசம் ,புதுசா CERTIFICATE வாங்கியிருக்கிறோம் என்று ..,ஒரு சில தொழிலாளிகள் மட்டுமே எங்கள் டீமை வாழ்த்தினார்கள் ..,MANAGEMENT ஹ்ம்ம்ம் ..,

அதுக்கபுறம்தான் என்னக்கு ஆப்பு வெய்சாங்க ...,என்னோட ஒவ்வொரு நகர்வுகளை கண்காணித்தான் அந்த மேனேஜர் ..நான் எங்கே போனாலும் வந்து வேவு பார்கிறது அப்புறம் என்னோட சிஸ்டம் ஆராய்ச்சி பண்ணுவது என்று ..சரி சரி நம்மக்கு UPRAISAL போடத்தான் இதெல்லாம் என்று நினைத்துவிட்டேன் ..,
ஒரு நாள் காலை வேளைக்கு வந்ததும் எங்க மேனேஜர் '''உன் வேலை எதுவும் சரில்லை ,நீ இங்கிருந்து கிளம்பலாம் என்று சொன்னார் '''...ஆத்திரம் தாங்கவில்லை...ஏனென்றால் என்னக்கு கீழ் வேலை பார்க்கும் பெண்கள் காது பட சொல்லிவிட்டான் ...,நான் நேராக அங்கேயிருந்து கிளம்பி ஒரு தம்மை பத்த வைத்து கொண்டு என் நண்பனுக்கு போன் செய்து என்னுடைய சாப்பாடு மூட்டை எடுத்து வரசொல்லிவிட்டேன் ..அவன் வந்து குடுத்ததும் அவனிடம் RESIGN லெட்டர் கொடுத்து அந்த மூதேவியிடம் குடுத்து விடும் படி சொல்லி கிளம்பி விட்டேன்...,ஒரு ரெண்டு மாதாம் தண்ட சோறு சாப்பிட்டு விட்டு வேறு வேளைக்கு சேர்ந்தும் விட்டேன் ,,,,

ஒரு நாள் கோயம்பேடில் பஸ் ஸ்டாண்டில் எங்கள் ஆடிட் டீமில் இருந்த ஒரு நண்பனை சந்திதேன்...அப்பொழுது அவனிடம் பேசி கொண்டிருக்கும் போது சொன்னான் ....,அந்த ஆடிட் FILES எல்லாம் நான் தான் DELETE பண்ணினேன் என்று கொஞ்சமும் குற்றஉணர்ச்சி இல்லாமல் சொன்னான் ...ஏன் செய்தாய் என்று கேட்க வில்லை ....,மனிதர்கள் எப்படியெல்லாம் இருக்கிறார்கள் என்று நினைதேன் ...அந்த பெண் எப்படி எல்லாம் மன உளைச்சல் பட்டிருக்கும் என்று எண்ணி ,உன் சங்காத்தமே வேண்டாமென்று அடுத்த நொடி கிடைத்த எதோ ஒரு பஸ்சில் ஏறினேன் ..

டிஸ்கி : அந்த கம்பெனி யின் வேலையே அதுதான் CERTIFICATE RENEW பண்ணும் போது ஆட்களை தேர்வு செய்து அவர்களிடம் நன்றாக வேலையை வாங்கி அது முடிந்ததும் வேலையை விட்டு எதாவது காரணம் சொல்லி தூக்கி விடுவார்கள்.

புதன், 4 ஆகஸ்ட், 2010

கார்ல் மார்க்ஸ் & இந்திய தொழிலாளர்களும்


காரல்மார்க்ஸ்
ஆம் சென்ற நூற்றாண்டில் மானிட சமுதயாதுக்காகவே வாழ்ந்த மகான் ...மனிதர்களுடைய உரிமைகளை பற்றி அறிவுறுத்திய தலைவன்; ,அவனுடைய சித்தாந்தங்கள் எல்லாம் மற்றவருடைய உழைப்பை திருடும் கனவானன்களுக்கு ஒரு சாட்டையடி ,மக்களுக்கோ அவன் ஒரு தீர்க்கதரிசி;அவன் மூச்சு நின்று பல வருஷங்கள் ஆயிற்று ,ஆனால் மார்கியசத்தை பற்றிய பேச்சு இன்று பாராளுமன்றங்களில் ,தொழிற்சாலைகளில் நாளாக நாளாக வலுக்கிறது;மார்க்ஸ் ஒன்றும் அழகான வாலிபனில்லை ;புறத்தூய்மை என்பது அவனிடத்தில் எப்போதுமே காணமுடியாது ஆனால் அகத்தூய்மை அனைவரையும் அவனிடம் இழுத்தது;அரசாங்களுக்கு அவன் அஞ்சவில்லை ,ஆனால் மனசாட்சிக்கு அஞ்சினான் ;ஏழைகளை சுரண்டுவதற்கு பயன்படும் கடவுள் ,சட்டம் ,அதிகாரம் போன்றவற்றை
வெறுத்தான்;அவன் வகுத்த சமதர்மம் மானிட சமுதாயத்தின் மேல் அவன் கொண்டிருந்த அன்பை காட்டுகிறது;
''இன்றைய அரசாங்கம் என்பது முதாளிகளுக்கு தேவையானவை பற்றி நிர்வாகம் செய்வதற்கு ஏற்படுத்தின கமிட்டி ''என்று சொன்னான் ; இது தான் இன்று தண்டகரான்யத்தில் இந்திய அதிகார வர்க்கம் பேயாட்டம் ஆடிகொண்டிருகிறது;அவன் தீர்கதரிசி .
இந்திய அதிகார வர்க்கம் வெறுத்தாலும் ,இன்றைய சூழ் நிலையில் அவனுடைய சித்தாந்தங்கள் தேவைபடுகின்றன .ஸ்ரீ பெரும்புதுரிலும் ,மறைமலைனகரிலும் உள்ள பன்னாட்டு கம்பனிகளில் தொழிலாளர்கள் படும் வேதனை சொல்லி மாளாது ,ஒரு மாதம் சம்பளம் 4000 ருபாய் ..ஆனால் அந்த சம்பளத்தில் அவனால் ஒரு மாதத்திற்குஉற்பத்தி செய்யப்படும் விலை பல லட்சம் ..இங்கே தான் சுரண்டபடுகிறான் தொழிலாளி ...,அவனுக்கு போனஸ் ,வீடு வாடகை ,பஞ்ச படி ,பயண படி போன்ற எதுவமே தரப்பட மாட்டாது..ஏனென்றால் அவனை பழகுனர் என்று முதலாளி வர்க்கம் ஒதுக்குகின்றது ,தொழிற் பழகுனரை வைத்து உற்பத்தி செய்ய கூடாது என்று தொழிலாளர் நல சட்டம் சொல்கிறது ..ஆனால் அது காற்றில் எழுதப்பட்ட சட்டமாகவே கம்பனிகளால் பார்க்க படுகின்றது ..இன்று எத்தனை தொழிலாளி தான் சுரண்டபடுவதை தெரியாமல் இருக்கிறான் ,ஒரு செங்கொடியை கூட நம்மால் நம் பிறந்த மண்ணில் கட்டப்பட்ட கம்பனிகளில் ஏற்ற முடியவில்லை அப்புறம் ஏன் COMMUNISM ,தொழிலாளர் அடக்குமுறை போன்ற வாசங்களை வைத்து பிழைப்பு நடத்துகின்றோம் ..வெட்கமாக இருக்கின்றது ..ஒரு சக தொழிலாளி பாதிக்க படுவதை நின்று நிதானமாக பார்த்து கொண்டிருக்கிறோம் ..
நான் கிட்டதட்ட நான்கு வருடம் பழகுனரகவே வேலை பார்த்து கொண்டிருந்தேன் ..,நான் செய்யும் உற்பத்தி கிட்ட தட்ட பல லட்சங்களை தாண்டும் ..,இதை பற்றி கேள்வி கேட்ட நான் பணியிலுருந்து தூக்கி எறியப்பட்டேன் ...,இந்திய வல்லரசாகும் என்று கனவு கொண்டிருபவர்களே ஒருவனின் உண்மையான உழைப்புக்கு வர வேண்டிய சம்பளத்தை பெற்று தந்து வல்லரசு கோஷங்களை போடுங்கள் ..ஒரு சாரார் மட்டுமே வளம்கொழித்து வரப்போகும் வல்லரசு பட்டம் சுரண்டப்பட்ட உழைப்பாளிக்கு கொடுக்கும் அமரர் பட்டம் என்று நினைவில் கொள்க