தளத்தை பற்றி

இது பனங்காட்டுநரி எந்த சலசலப்புக்கும் சலனபடாது ...,ஊ ஊ ஊ

இந்த ஓசி ப்ளாக் ஸ்பாட்டுக்கு வந்திருக்கும்,வாசக பெருமக்களே ,இலக்கிய ஆர்வலர்களே ,இனிய தமிழ் மக்களே மேலும் என் உயிரினும் மேலான என் ரத்தத்தின் ரத்தங்களே (பயங்கர கைதட்டல் )..,இந்த தளத்தில் நொந்னை பேச்சு எல்லாம் பேசப்டாது ..ஏன்ன ப்டாதுன்ன ...,ப்டாது..,வந்தீங்களா ஜாலியா படிச்சிட்டு போய்ட்டே இருங்க ...,இல்லன என் நண்பன் ( குரங்கு )வைத்து சுட்டு புடுவேன் ஹா ஹா ஹா .

ஓகே ஸ்டார்ட் கும்மி ..., .

செவ்வாய், 19 அக்டோபர், 2010

கடிதம்

என் கனவு பதிவிற்காக அடுத்த கட்ட அறிவார்ந்த வேளைகளில் ஈடுபடுகிறேன் ..,எங்கள் அண்ணன் தன்மானசிங்கம் பன்னிகுட்டி ராமசாமி அவர்களின் வேண்டுகோளை ஏற்று இந்த வேலைகளின் ஆரம்ப கட்ட பணிகள் ஆய்வில் உள்ளது என்பதையும் தெரிவித்துகொள்கிறேன் ...,இன்னும் இரண்டு நாட்களில் என் பதிவு அம்பலம் ஏறும் என்று சொல்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் ..,அதுக்குள்ள என்னக்கு மாலை போட்டு பாடையில எத்திராதீங்க சாமிகளா !!!

இப்படிக்கு

பதிவுலக மாமேதை பனங்காட்டுநரி

சனி, 16 அக்டோபர், 2010

எதிர் தாக்குதல் - தன்னம்பிக்கை

ஒரு வாரமா சந்தோஷமா இருக்கேன் .எதுக்கு சந்தோஷமா இருக்கேன்னு கேட்டீங்கன உங்க வீட்ல பாயசம் வைச்சு பக்கத்துக்கு வீட்ல எல்லோருக்கும் குடுப்பீங்க ..,ஆமாங்க என்னோட போன பதிவுக்கு மட்டும் மொத்தம் 45646 கமெண்ட் வந்திருக்கு அப்படியே இன்ட்லில என்னோட பதிவ பாராட்டி மெயில் அனுப்பிசிருகாங்க ..,கூடவே நேத்து ஒரு பிளான்க் செக் , சிக்நேச்சர் கூட இல்லாம அனுபிச்சு பாராட்டியிருக்காங்க
தமிழ் நாட்டு நியூஸ் பேப்பர் எல்லாம் என்னோட பேட்டிக்கு காத்துண்டு இருக்கு .நேத்து என்னக்கு பாராட்டு விழா நடத்துறதுக்கு தேதி கேட்டு போயிருக்காங்க ..,நானும் டெல்லி ல ஒரு மீட்டிங் இருக்கேன் அப்புறம் பேசுறேன்னு சொல்லி அனுப்பிசிடேன் .இன்னிக்கு காலையிலே ஷாருக்கான் என்னோட அடுத்த படத்துல நீங்க தான் சார் ஹீரோவா நடிக்கணும் நான் செகண்ட் ஹீரோவா வந்துடுறேன் சொல்லி ரொம்ப அடம்பிடுச்சாறு ...,சரி டேட் பிக்ஸ் பண்ணி சொல்றேன் சொல்லி அனுபிச்சிடேன்..,ஆனா அவரு கண்ணிமாராவுல ரூம் போட்டு டேட் வாங்கி தான் மும்பை போவேன்னு இருக்கிறாம் ..,ரஜினி என்னை ரோபோ பார்ட் 2 வுல நடிக்க சிபாரிசு செய்ஞ்சு இருக்குராரம் ஷங்கர் கிட்ட ...., ஆனா
*
*
*
*
இந்த மேட்டர் எல்லாம் தெரிஞ்ச சிரிப்பு போலிசு என்னை மனதளவில பாதிக்க படுற கமெண்ட் போட்டு என் வளர்ச்சியை தடுக்க பார்க்குது ..,

ஆனா நாங்க யாரு வீட்ல செய்ஞ்ச மைசூர்பாக்க குக்கர்ல ரெண்டு விசில் விட்டு தின்னவங்க நாங்க ( அம்மா அடிக்காதீங்க )..,அவ்ளோ உஷாரா இருப்போம் ...,யோவ் சிரிப்பு போலிசு உன்னோட பாச்சா எல்லாம் பலிக்காதுயா ...,என்னோட தங்க தளபதி டெர்ரர்..., தீக்குளிக்க தயார் தலைவா நீ ஊ ன்னு சொல்லு அந்த ரமேஷ இல்ல நானா பார்த்துட்டு ஒரு முடிவுக்கு வருவோம்னு சொல்லிட்டு எண்ணெய் தேச்சு குளிக்க போயிருக்கான்.என்னை எதிர் பதிவு திலகம்னு மத்திய அரசு ஒரு விருது கொடுக்குது ...,நான் தான் வேணாம்னு சொல்லிட்டேன் ..ஏன் தெரியுமா இங்க விருத திருடுற பன்னாடைங்க ஜாஸ்தி ..,அதான் அப்புறமா என்னோட ஷெட்டுலே பார்த்துட்டு வாங்க வரேன்னு லெட்டர்பாட்ல ஜனாதிபதிக்கு அனுபிச்சிடேன்

ரமேஷ் (எ )சிரிப்பு போலிசு...,என்னக்கு சேர்ந்த கூட்டம் ,பட்டம் ,பதவி ,பாராட்டு விழா ,எல்லாம் நானா கேட்டது இல்ல எல்லாம் தானா சேர்ந்தது ...,இந்த நரி காக்ககிட்டவே வடையை திருடி தின்ன நரி ,உன்னோட வேலையெல்லாம் வேற யாருகிட்டேயும் வைச்சுகாதே வர்ட்டா ...,

டிஸ்கி : அந்த இன்ட்லி மெயில் பார்க்கணுமின நீங்க என்னோட மெயில் ID க்கு வாங்க ..,மெயில் id : பணங்கட்டுநரி@ஜிமெயில்.காம் ..,பாஸ் வோர்ட் : அகாரா புக்காரா ..,.

வியாழன், 14 அக்டோபர், 2010

சினிமா புதிர் போட்டி

இதோ பாருங்க மக்களே ...,இதுக்கு நான் காரணமே இல்ல ..,எல்லாம் இந்த ,பதிவு போட்டு என்னை டரியல் ஆக்கிட்டாங்க ...,என்னால இவங்க மாதிரி கிராபிக்ஸ் வொர்க் பண்ண முடியாது ( தெரியாது ) ...,சரி எதுனா வரலாற்று கேள்வி கேக்கலாம்னு பார்த்தா நான் என்ன செய்ஞ்சு கேள்வி கேட்போனோ (கூகிள் ஆத்தா ) அதே மாதிரி நீங்களும் கூகிள் ஆத்தா கிட்டே கேட்டு பதில் சொல்லிடுவீங்க ...,அதுனால என்னக்கு ரொம்ப பிடிச்ச படத்தோட ஸ்டில் போட்டிருகேன் ...,தக்காளி கண்டு புடியுங்க ..,கண்டுபிடிசிட்டீங்கான டெர்ரர் ப்ளாக் பாஸ்வோர்ட்...,அண்ட் USER நேம் பரிசாக அளிக்கப்படும் ...,

01.


இது ஒரு ஆங்கில படம் ..., Anthony Burgess
எழுதின நாவல் தான் இந்த படம்

02.
இந்த படத்தில் ஒரே ஒரு கேரக்டர் தான் ...,இந்த படத்தில சவுண்ட் ட்ராக் Great Mass in C Minor, No.16 (K.427) - அக்னஸ் ..., நம்ம மொசார்ட் அண்ணன் சிம்போனி தான் உபயோக படுத்தியிருபாங்க...,க்ளாஸ் மூவி

03.

ஹா ஹா ..,கண்டு புடிச்சிடுவீங்க...,மனிதத்தை பற்றி பேசுகிறவர்கள் நிச்சயம் இந்த படத்தை பார்த்திருப்பார்கள் ....,சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படம் ...,

04.

நம்ம பாரதிராஜா எடுத்த பொம்மலாட்டம் ,கல்லுக்குள் ஈரம் போன்ற படத்தை பார்த்திருப்பீர்கள் ...,அதே மாதிரி தான் ...,பட் இந்த படம் மாஸ்டர் பீஸ்

05.
இந்த படத்துல ஒரு வசனம் வரும் ...,Life is a box of chocolates,. You never know what you're gonna get. இந்த வசனத்தை கேட்டால் ஆயிரம் டம்ளர் க்ளுகான் -டி சாப்பிட்ட மாதிரி இருக்கும்

06.

இந்த படம் உண்மை சம்பவத்தை வைத்து படமாக்கப்பட்டது .., ஒரு இனத்தையே அழித்த நாஜி படையினரது அராஜகங்களையும் ,மனித உரிமை மீறல்களையும் அப்பட்டமாக படமாக்கப்பட்டது...,



கண்டு புடியுங்க பார்க்கலாம் !!!!!!!!

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

உங்ககிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா?

நண்பர்களே நேற்று சந்தோஷ்பக்கங்கள் இந்த பதிவை போட்டு இருந்தார் , "இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க" அப்படின்னு கேட்டு இருந்தார் , ரொம்ப நல்ல விஷயம் எனவே நண்பர்களே உங்களால் முடிந்த அளவுக்கு அனைவரும் குறைந்த பட்சம் ஒரே ஒரு நாளாவது உங்கள் பிளாக்கில் இந்த பதிவை போடுங்க நிறைய பேருக்கு ரீச் ஆகும் . விருப்பமுள்ளவர்கள் அனைவரும் இந்த தொடர்பதிவை தொடரலாம் .

உங்க கிட்ட நீங்க உபயோகப்படுத்தாத பொருட்கள் ஆடைகள், பொம்மைகள் இருக்கா? அதை தூக்கி எறியவும் மனசு இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிங்களா?

CTC - Chennai Trekking Club என்று ஒரு இயக்கம் இருக்கிறது.. நீங்க மேற் சொன்ன விஷயங்களை கொடுத்து யாருக்கேனும் உதவ விரும்பினால் இந்த சுட்டியில் (https://spreadsheets1.google.com/viewform?hl=en&formkey=dEU1d2gzVnNVVTBMR3Z2eGNiMS1RaVE6MQ#gid=0)
உள்ள Excel Formஜ நிரப்புங்கள். தன்னார்வலர் ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு உங்களை சந்தித்து அதை பெற்றுக்கொள்வார். இப்போதைக்கு இது சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டுமே.. உங்களால் நீங்க அளிக்க இருக்கும் பொருட்களை சென்னைக்கு அனுப்ப முடிந்தால் கூட தொடர்பு கொள்ளலாம்.

தயவு செய்து திரும்ப உபயோகப்படுத்தும் நிலையில் இருந்தால் மட்டும் குடுங்க.. கிழிந்த துணிகளை எல்லாம் குடுக்காதிங்க பிளீஸ்...!

இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க.

(நன்றி :சந்தோஷ்பக்கங்கள், மங்குனி அமைச்சர் பன்னிகுட்டி ராம்சாமி

)

இத்தகவலை மேலும் பகிர்பவர்களுக்கும், உதவுபவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!