தளத்தை பற்றி

இது பனங்காட்டுநரி எந்த சலசலப்புக்கும் சலனபடாது ...,ஊ ஊ ஊ

இந்த ஓசி ப்ளாக் ஸ்பாட்டுக்கு வந்திருக்கும்,வாசக பெருமக்களே ,இலக்கிய ஆர்வலர்களே ,இனிய தமிழ் மக்களே மேலும் என் உயிரினும் மேலான என் ரத்தத்தின் ரத்தங்களே (பயங்கர கைதட்டல் )..,இந்த தளத்தில் நொந்னை பேச்சு எல்லாம் பேசப்டாது ..ஏன்ன ப்டாதுன்ன ...,ப்டாது..,வந்தீங்களா ஜாலியா படிச்சிட்டு போய்ட்டே இருங்க ...,இல்லன என் நண்பன் ( குரங்கு )வைத்து சுட்டு புடுவேன் ஹா ஹா ஹா .

ஓகே ஸ்டார்ட் கும்மி ..., .

புதன், 29 செப்டம்பர், 2010

பூம் பூம் பூம் ரோபோட ....,




டிஸ்கி 01 : நாட்ல வெல்லாமை எந்திரனால தான் சரியாய் விலைல ,லூயிஸ் பனுவல் ,விட்டோரியா டி சிக்கா,போன்ற டைரக்டர் படம் எந்திரனலதான் தடை படுது சொல்றவங்க தயவு செய்து ஒன் ஸ்டேப் பேக் போய் வேற ப்ளாக் படிங்க ...,மீறி படிச்சிட்டு புடிக்கலைன்ன மைனஸ் வோட்டு போட்டுட்டு போய்டுங்க ...,படிக்காதீங்க .




ரஜினி ....,இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத பெயர் .நான் இவருக்கு மிக பெரிய ரசிகனானது என்னுடைய 7 வது வயதில் .எங்கள் ஊர் டென்ட் கொட்டாயில் (தியேட்டர் பேரு வேந்தர் ) இவர் படம் பாயும் புலி படம் பார்த்தேன் ..யப்பா.., அந்த படத்துல வந்த சண்டையும் ,ஸ்டைலும் ரொம்ப புடிச்சிது .ரெண்டு நாள்ல மறந்து போச்சி .அப்புறம் இன்னொரு படம் பார்த்தேன் .....,யப்பா சாமி இன்னா ஸ்டைல் ,இன்னா நடை ,இன்னா மேனரிசம் ..,சொக்கி போய்ட்டேன்..படம் பேரு மூன்று முகம் .அந்த படத்துல வர்ற அலெக்ஸ் பாண்டியனை இப்பவும் நினைச்சிகிட்டனா ஒரு பிரெஷ்நெஸ் வரும் .அது தான் ரஜினி .

ஜானி படத்துல ஒரு பாட்டு சீன் ..,அதுல போர்வையை போட்டுகிட்டு தலையை சாச்சிட்டு ஒரு லுக் விடுவார் பாருங்க ...,ஹையோ சாமீ 10 டம்ளர் க்ளுகான் -டி சாப்பிட எபெக்ட் வரும் .இந்த மாதிரி வேற எந்த நடிகரும் என்னக்கு மகிழ்ச்சியையோ ,சந்தோஷத்தையோ கொடுக்க வில்லை .இப்போ கூட அந்த வயசுக்கே போன மாதிரி ஒரு பீலிங் .இது ரஜினியால் மட்டும் முடியும் ..இன்னொருத்தன் பொறந்து வந்தாலும் இந்த அளவுக்கு மாஸ் இருக்குமான்னு சந்தேகம் தான்.




34 வருஷம் அவர் உழைத்த உழைப்பு (அது தனித்துவமானது ) தான் அவரை இன்று யாருமே எட்ட முடியாத அளவு மலை உச்சியில் வைத்துள்ளது .அந்த மனிதனின் இயல்பான நடிப்புக்கு நான் என்றுமே ரசிகன் ...,முள்ளும் மலரும் ,ஜானி ,புவனா ஒரு கேள்விகுறி ,தப்பு தாளங்கள் ,தில்லு முள்ளு ,போன்ற எண்ணற்ற படங்களும் ,,,...,ஸ்டைலுக்கு ஹா ஹா ஹா ...,எல்லா படங்களும்.தான்....,குறிப்பா ,ராஜாதி ராஜா ,பாட்ஷா (யப்பா இந்த பட பேர டைப் பண்ணும் போதே ஒரு புத்துணர்ச்சி ) ,பில்லா, மாப்பிள்ளை ,முத்து ,படையப்பா .... இந்த படையப்பா பத்தி ஒரு விஷயம் ,இந்த படத்துல தலைவர் ஒரு காட்சியல துண்ட தூக்கி போட்டு ஊஞ்சல்ல உக்காருவாரு பாருங்க ...,நாங்க எல்லாம் விசிலடிக்றோம் என் நண்பன் மட்டும் எழுந்து நின்னு ,தலைவா தலைவான்னு அழுவுறான்
இப்போ அவன் ஒரு MNC ல சீனியர் மேனேஜர் ...., படம் பாக்கிறதுக்கு நாளைக்கு வர்றான்.


எந்திரன் நாளைக்கே நைட் ஷோ ஆரம்பிக்குது . இப்போ அந்த பழைய சந்தோசம் வந்தாச்சு ...,எங்க ஏரியா பூரா விழாகோலம் தான் ..,ஒவ்வொருத்தன் முகத்திலும் அவ்ளோவு சந்தோசம் ...,எந்திரன் ஆட்டம் ஆரம்பிச்சாச்சு ....,இனிமே பும் பூம் பூம் பூம் ..ரோபோட ...,ரோபோட ...,

டிஸ்கி 02 : இங்க என்னை சந்தோஷபடுத்தின ஒருவரை பத்தி போட்டிருக்கேன் .., கும்மியடிகனும்னா இதுக்கு முன்னாடி இருக்கிற பதிவுல போய் கும்மியடிங்க ..,

திங்கள், 27 செப்டம்பர், 2010

குவார்ட்டர் - கட்டிங் - டெர்ரர் -பாண்டி

நீங்கள் எப்பொழுதாவது உங்கள் குவார்ட்டர் பாட்டில்லை ராவாக அடித்து விட்டு தலை வேகமாக சுழல்வதை உணர்ந்து இருக்கிறிர்களா. உங்கள் தொண்டை குழியிலிருந்து
வயிற்றின் மைய பகுதி வரை ஒரு எரிச்சல் எழுந்து உங்கள் உடல் முழுவது பரவுவதை உணர்ந்து இருக்கிறிர்களா? நான் உணர்ந்து இருக்கிறேன்.உடனே ஒரு சொம்பு தண்ணீர் குடித்து
விட்டு படுத்து விடுவேன்.என் பிறந்தோம்? என்ன சாதித்தோம் என்ற கேள்வி அப்போழ்துதான் எழும் ..,மேலும் சம்மட்டியால் அடிக்கும் .உடலில் உள்ள ஒவொறு திசுவும் இந்த கேள்விஎதிரொளிக்கும் பொழுது எனக்குள் இருக்கும் நான் விடையறியாது...அதனால் மறுபடியும் ஒரு குவாட்டர் அடித்து விடுவேன் ..,

அந்த கேள்விக்கு விடைகான நான் தேடிய தேடலில் கிடைத்தது வெறும் காலி பாட்டில்களும் ,வாட்டர் பாக்கெட் கவர்களும் தான்.எந்த திசையில் தேடுவது என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் என் தேடுதலின் தீவிரம் அதிகரித்தது.ஆனால் உள் எறியும் தீயின் வேகம் குறைந்ததது . அந்த போதையிலே எழுந்தேன் ...,மணி பார்த்தேன் 9 .55 p .m ஓடினேன் ,ஓடினேன் ..

கடை சாத்திவிட்டர்கள்....,


கடைகள் பல மாறி சரக்கை தேடினேன். சரக்கு கிடைக்கவில்லை ஆனால் எரிந்து கொண்டு இருந்த தீயின் வேகம் அதிகரித்தது.மனம் தேடலை அதிகரித்தது சரக்குவெள்ளத்தில் ஆக்ரோஷமாக நீந்தி கொண்டு இருந்தது. முயற்சியை சற்றும் கைவிட முடியாமல் தேடினேன் .

ஆ.... அதோ ஒருவன் தன்னதனியாக நிற்கிறான் ..,இருக்கிறதா கேட்டேன் ...இருக்கு ஆனால் 100 ருபாய் என்றான் .சரி தா என்று வாங்கி விட்டேன். இனி கவலை இல்லை கவலை இல்லாமல் சரக்கு அடிக்கலாம் என்று என்னி இருந்த நேரத்தில்......,எனக்குள் எதோ ஒரு மாற்றம். எதோ ஒன்றை உணர்கிறேன். முன்பிலும் அதிகமாக.யோசித்தேன் .

ஆங் ..சைடு டிஷ் வாங்க மறந்து விட்டேன் ..,அது தான் என்னுள் மாற்றத்தை உண்டு பண்ணியது ..,வாங்கினேன் ...,(ஊறுகாய் ).பாட்டிலை திறந்தேன் .அந்த பொன்னிற வேர்வையை (சரக்கு தான் பாஸ் )சிறிது தண்ணி ஊற்றி பருகினேன் அது தொண்டை குழியை அடைந்து அங்கிருந்து பள்ளத்தை நோக்கி பாயும் வெள்ளம் போல் நாடி நரம்பு எல்லாம் தீ குழம்பாய் பாய்கிறது.போதையில் படுத்து விட்டேன் .காலையில் எழுந்தேன் ...,கடிகாரத்தை பார்த்தேன் ...,மணி 9 .45 AM ..,அவசரம் அவசரமாக முகத்தை அலம்பி சரக்கு வாங்கசென்றேன் ...,இதே போல் போதையோடு வாழ்வதற்கு
இயற்கையிடம் என் மனம் இரஞ்சியது


டிஸ்கி : சரக்கு வாங்க கடைசி நிமிடத்தில் போவோர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்

வியாழன், 2 செப்டம்பர், 2010

டெர்ரர் பாண்டியின் அத்துமீறல் -உலக பதிவர்கள் கவலை

கடந்த சில நாட்களாகவே பதிவுலகில் ஒரு நச்சு பாம்பு சுத்தி வருவதாக பிரபல பதிவர்கள் ஜெய் ,மங்குனி ,அருண் பிரசாத் ,ஜில் தண்ணி போன்ற பதிவர்கள் கவலை அடைந்துள்ளதாக தெரிகிறது .கடமை ,லஞ்சம் ,கண்ணியம் ,மாமுல் ,கட்டுப்பாடு ,ஜொள்ளு,கமெண்ட் மாடரேஷன் என்று நேர்மையாக வாழ்ந்து வரும் நம் சிரிப்பு போலிசு வாங்கின அவார்டை திருடியது ,பனன்காட்டு நரியை பதிவு எழுதவில்லை என்று சொன்னால் வீராசாமி dvd யை அவர் வீட்டுக்கு பார்சல் அனுப்பி கொலை மிரட்டல் விடுப்பது போன்ற உட்சபட்ச தாக்குதல் தொடர்கிறது .பதிவுலகில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து போயுள்ளது .

ஆம் டெர்ரர் சாதாரண ஆள் இல்லை ..எரியிற தீயில் எண்ணெய் ஊற்றுவார்கள் ஆனால் இவன் சட்டியையே கவுக்கிற ஆள் ..,இந்த கொடுமையெல்லாம் மேற்கண்ட பதிவர்கள் அனுபவிதிருகிரார்கள் .நேற்று டெர்ரர்இன் உச்ச பட்ச கொடுமை அரங்கேறியுள்ளது ...,ஒரு நல்ல சிறுகதை எழுதி கும்மி அடிக்கும் சங்கத்துக்கு ஆற்றொன்ன துயரை அரேங்கெற்றியுள்ளார் ...அந்த பதிவின் பாதிப்பு இந்த பதிவை எழுத தூண்டியது

இதனால் அறிவிக்கபடுவது என்னவென்றால் மங்குனி செலவில் மேற்சொன்ன பதிவர்கள் அனைவரும் இங்கிருந்து ஷார்ஜா கிளம்பி அவர் வீடு முன்பாக ஆர்பாட்டமும் ,அங்கிருந்து கிளம்பி சென்னை மெரினாவில் தீக்குளிப்பு போராட்டமும் நடத்தப்படும் என்பதை தெர்வித்து கொள்கிறோம் .முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

புதன், 1 செப்டம்பர், 2010

என்னை பாதித்த பதிவர்கள்

நான் கிட்டதட்ட ஓராண்டு காலமாக பதிவுலகத்தில் வாசகனாய் இருந்து ஒரு சிலர் உசுபேத்தி விட்டதால் பதிவு எழுத வந்தேன் .நான் மிக சிலரின் பதிவுகளை மட்டுமே படித்து வந்த தாக்கமோ அல்லது நான் படித்த ஆசிரியர்களின் எழுத்துகளோ என்னால் எழுத முடியவில்லை .எழுத்துக்கள் அவர்களை போல் கோர்வையாகவும் சுவையாகவோ இருக்காது என்பதது மட்டும் வெள்ளிடை மலை .என்னக்கு முதன்முதலில் அறிமுகமானது சாரு நிவேதிதாவின் வலைமனை தான்.பதிவுலகத்தில் என் முதல் கமெண்ட் கிரி ப்ளோகில் தான் போட்டேன் ...எப்படி தமிழில் தட்டச்சு பண்ணுவது என்று அவர் தான் சொல்லி குடுத்தார் ..தேர்ந்த பத்திரிகையாளர் போல எழுதுவார் ..ஊருக்கு வந்து எனக்கு போன் செய்த முதல் பதிவர் அவர்தான் . அதிலிருந்து ஒவ்வருவரை பிடித்தேன்.அதில் வால்பையனும் ,ராஜனும் என்னை நிறைய யோசிக்க வைத்த பதிவர்கள்.

அதிலிருந்து தான் எங்கள் தானை தலைவர் பட்டாபட்டியின் வலைபூ கண்ணில்பட்டது .என்னடா இது பேரே வில்லங்கமா இருக்கேன்னு தான் படித்தேன் .ஆஹா அவருடைய நக்கல் ,நையாண்டியில் நம்முடைய அரசியல் வியாதிகளின் டவுசெரை கிழித்து தொங்க போட்ட பதிவுகளை பார்த்ததும் இதை தான் இவ்வோளவு நாள் மிஸ் பணிடோமே ஒரு பீலிங் .இந்த போஸ்ட் என்னை மிகவும் பாதித்தது ஏனென்றால் அதிலிருந்த டீலிங்கே வித்தியாசமாய் இருந்தது ...,அப்புறம் என்னோட நண்பர்களுக்கு அறிமுகபடுத்தினேன் ..யாருடே இந்த ஆளு இவ்வளோ தில்லா எழுதுறான் ...,போன் நம்பர் இருக்கா என்று கேட்கும் அளவுக்கு போய்டிச்சு .இப்போ மனுஷன் இந்தியாவுல தான் இருக்கு ..ஒரு மெயில் கூட காணோம் ..g talk ல invite போடிருகேன் ...வந்ததுன்ன முதல்ல சோனா ஏன் ஆஸ்திரேலியா போனான்னு கேக்கணும்

அடுத்து நம்ம வெளியுரு சைந்தவி பக்கங்கள் படிச்சிட்டு நிஜமாவே அதிலிருந்து என்னால் இன்னும் மீளவே முடியலை.EXCELLENT காதல் கடிதம் அது மிகை படுத்தி சொல்ல வில்லை புல் போதைல அந்த கடிதத்தை படிச்சுட்டு ஒரே பீலிங் சா போச்சு ....,சரி ஒரு லூசுதனமா பின்னூட்டம் போடலாம்னு போட்டா ஒரே வெட்டு ,தலை துண்டா போய்டுச்சி ..இந்நாட மனுஷன் இப்படி கோப படுரரேனு பார்த்த எங்க தலைவர் குலசாமி பட்டா அங்கு அறிவுரை வழங்குச்சு ..இங்கே அருமை ,வாழ்த்துக்கள் என்று பின்னோட்டம் இட்டால் அது வன்முறையாக கருதப்படும் என்று .அப்புறம் தான் தெரிஞ்சுது இது சும்மா ஜாலியா போட்டு தள்ற கோஷ்டி னு...,

நான் நிறைய புனைவுகள் ,கதைகள் ,கட்டுரைகள் ,வாழ்கை வரலாறுகள் படித்திருந்தாலும் சந்தர்பம் சூழ்நிலைக்கு ஏற்ப நக்கல் நையாண்டியுடன் எழுத்துகளை எழுத நம்முடைய பட்டாபட்டியை தவிர இந்த பதிவுலகில் யாருமே எழுதவில்லை ..,நான் மிகை படுத்தி சொல்கிறேன் என்று சொன்னால் http://pattapatti.blogspot.com/2010/06/blog-post_18.html பதிவையும் , http://pattapatti.blogspot.com/2010/07/blog-post.html பதிவையும் படித்து பாருங்கள் ..,

அடுத்து நம்ம ஹி ஹி ஹி மங்குனி ..,சும்மா சொல்ல கூடாது இந்த மனுஷன் கண்டு பிடிச்ச முஸ்கி ,குஸ்கி ,கிஸ்கி ,டுஸ்கி எல்லாம் பதிவுலகத்தில் சூப்பர் ஹிட் ...அதுவும் அந்த ப்ளோக ஓபன் பண்ண உடனே புலிகேசி (வடிவேலு ) ஸ்டில பார்த்தாலே தன்னால சிரிப்பு வந்துடும் ...அதுவும் அந்த கமெண்ட்ஸ் பாக்ஸ் ல இருக்கும் வடிவேலு படத்துக்கும் அது சொல்ற பதிலுக்கும் சூப்பரா மேட்ச் ஆகும் ...இதுக்காகவே அதை ஓட்டணும் போல இருக்கும்..அதுனால தான் அது ப்ளோக்ல என்னுடைய கமெண்ட் அதிகமா இருக்கும் ...அதுவும் மங்குனி சொன்ன ஒரு கமெண்ட்(வெளியுரு பதிவுல ) நினைச்சு நினைச்சு சிரிப்பேன் இப்பொழுதும் ...அது "" பட்டா பட்டியை ANONYMOUS ஆக்கின பெருமை உன்னையே சேரட்டும் வெளியுரு "".


பதிவு எழுத ஆரம்பித்தவுடன் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள் எல்லோருமே g -talk வழியாகத்தான் ...நம் ,ஜெய்,அருண் பிரசாத் ,டெர்ரர் பாண்டி ..போன்றவர்கள் இந்த மாதிரி ஆட்களால்தான் மனதின் இறுக்கமும் ,வாழ்கையின் பிரச்சனைகளும் மறந்து சில மணி நேரங்கள் சந்தோஷமாக இருக்க முடிகிறது .இவர்கள் ஊருக்கு வந்தால் ஒரு போன் செய்யாமல் போக மாட்டார்கள் என்பது என் எண்ணம் .

டிஸ்கி : மன்குனிக்கு ஒரு எதிர் பதிவு எழுதி ஒன்னு draftla இருக்கு...தற்காலிகமா அதை நிறுத்தி வைத்துள்ளேன் ..,இதில் ஏதேனும் குறை இருந்தால் தயவு செய்து அதை கண்டும் காணாமல் வோட்டு போட்டு பின்னோட்டங்கள் இடுங்கள் ராசா ..,

டிஸ்கி 2 : இந்த இந்த னு லிங்க் குடுபீங்கலே எப்படியா அது ..,ஒரு மெயில் விடவும்