தளத்தை பற்றி

இது பனங்காட்டுநரி எந்த சலசலப்புக்கும் சலனபடாது ...,ஊ ஊ ஊ

இந்த ஓசி ப்ளாக் ஸ்பாட்டுக்கு வந்திருக்கும்,வாசக பெருமக்களே ,இலக்கிய ஆர்வலர்களே ,இனிய தமிழ் மக்களே மேலும் என் உயிரினும் மேலான என் ரத்தத்தின் ரத்தங்களே (பயங்கர கைதட்டல் )..,இந்த தளத்தில் நொந்னை பேச்சு எல்லாம் பேசப்டாது ..ஏன்ன ப்டாதுன்ன ...,ப்டாது..,வந்தீங்களா ஜாலியா படிச்சிட்டு போய்ட்டே இருங்க ...,இல்லன என் நண்பன் ( குரங்கு )வைத்து சுட்டு புடுவேன் ஹா ஹா ஹா .

ஓகே ஸ்டார்ட் கும்மி ..., .

அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 ஆகஸ்ட், 2010

கார்ல் மார்க்ஸ் & இந்திய தொழிலாளர்களும்


காரல்மார்க்ஸ்
ஆம் சென்ற நூற்றாண்டில் மானிட சமுதயாதுக்காகவே வாழ்ந்த மகான் ...மனிதர்களுடைய உரிமைகளை பற்றி அறிவுறுத்திய தலைவன்; ,அவனுடைய சித்தாந்தங்கள் எல்லாம் மற்றவருடைய உழைப்பை திருடும் கனவானன்களுக்கு ஒரு சாட்டையடி ,மக்களுக்கோ அவன் ஒரு தீர்க்கதரிசி;அவன் மூச்சு நின்று பல வருஷங்கள் ஆயிற்று ,ஆனால் மார்கியசத்தை பற்றிய பேச்சு இன்று பாராளுமன்றங்களில் ,தொழிற்சாலைகளில் நாளாக நாளாக வலுக்கிறது;மார்க்ஸ் ஒன்றும் அழகான வாலிபனில்லை ;புறத்தூய்மை என்பது அவனிடத்தில் எப்போதுமே காணமுடியாது ஆனால் அகத்தூய்மை அனைவரையும் அவனிடம் இழுத்தது;அரசாங்களுக்கு அவன் அஞ்சவில்லை ,ஆனால் மனசாட்சிக்கு அஞ்சினான் ;ஏழைகளை சுரண்டுவதற்கு பயன்படும் கடவுள் ,சட்டம் ,அதிகாரம் போன்றவற்றை
வெறுத்தான்;அவன் வகுத்த சமதர்மம் மானிட சமுதாயத்தின் மேல் அவன் கொண்டிருந்த அன்பை காட்டுகிறது;
''இன்றைய அரசாங்கம் என்பது முதாளிகளுக்கு தேவையானவை பற்றி நிர்வாகம் செய்வதற்கு ஏற்படுத்தின கமிட்டி ''என்று சொன்னான் ; இது தான் இன்று தண்டகரான்யத்தில் இந்திய அதிகார வர்க்கம் பேயாட்டம் ஆடிகொண்டிருகிறது;அவன் தீர்கதரிசி .
இந்திய அதிகார வர்க்கம் வெறுத்தாலும் ,இன்றைய சூழ் நிலையில் அவனுடைய சித்தாந்தங்கள் தேவைபடுகின்றன .ஸ்ரீ பெரும்புதுரிலும் ,மறைமலைனகரிலும் உள்ள பன்னாட்டு கம்பனிகளில் தொழிலாளர்கள் படும் வேதனை சொல்லி மாளாது ,ஒரு மாதம் சம்பளம் 4000 ருபாய் ..ஆனால் அந்த சம்பளத்தில் அவனால் ஒரு மாதத்திற்குஉற்பத்தி செய்யப்படும் விலை பல லட்சம் ..இங்கே தான் சுரண்டபடுகிறான் தொழிலாளி ...,அவனுக்கு போனஸ் ,வீடு வாடகை ,பஞ்ச படி ,பயண படி போன்ற எதுவமே தரப்பட மாட்டாது..ஏனென்றால் அவனை பழகுனர் என்று முதலாளி வர்க்கம் ஒதுக்குகின்றது ,தொழிற் பழகுனரை வைத்து உற்பத்தி செய்ய கூடாது என்று தொழிலாளர் நல சட்டம் சொல்கிறது ..ஆனால் அது காற்றில் எழுதப்பட்ட சட்டமாகவே கம்பனிகளால் பார்க்க படுகின்றது ..இன்று எத்தனை தொழிலாளி தான் சுரண்டபடுவதை தெரியாமல் இருக்கிறான் ,ஒரு செங்கொடியை கூட நம்மால் நம் பிறந்த மண்ணில் கட்டப்பட்ட கம்பனிகளில் ஏற்ற முடியவில்லை அப்புறம் ஏன் COMMUNISM ,தொழிலாளர் அடக்குமுறை போன்ற வாசங்களை வைத்து பிழைப்பு நடத்துகின்றோம் ..வெட்கமாக இருக்கின்றது ..ஒரு சக தொழிலாளி பாதிக்க படுவதை நின்று நிதானமாக பார்த்து கொண்டிருக்கிறோம் ..
நான் கிட்டதட்ட நான்கு வருடம் பழகுனரகவே வேலை பார்த்து கொண்டிருந்தேன் ..,நான் செய்யும் உற்பத்தி கிட்ட தட்ட பல லட்சங்களை தாண்டும் ..,இதை பற்றி கேள்வி கேட்ட நான் பணியிலுருந்து தூக்கி எறியப்பட்டேன் ...,இந்திய வல்லரசாகும் என்று கனவு கொண்டிருபவர்களே ஒருவனின் உண்மையான உழைப்புக்கு வர வேண்டிய சம்பளத்தை பெற்று தந்து வல்லரசு கோஷங்களை போடுங்கள் ..ஒரு சாரார் மட்டுமே வளம்கொழித்து வரப்போகும் வல்லரசு பட்டம் சுரண்டப்பட்ட உழைப்பாளிக்கு கொடுக்கும் அமரர் பட்டம் என்று நினைவில் கொள்க