தளத்தை பற்றி

இது பனங்காட்டுநரி எந்த சலசலப்புக்கும் சலனபடாது ...,ஊ ஊ ஊ

இந்த ஓசி ப்ளாக் ஸ்பாட்டுக்கு வந்திருக்கும்,வாசக பெருமக்களே ,இலக்கிய ஆர்வலர்களே ,இனிய தமிழ் மக்களே மேலும் என் உயிரினும் மேலான என் ரத்தத்தின் ரத்தங்களே (பயங்கர கைதட்டல் )..,இந்த தளத்தில் நொந்னை பேச்சு எல்லாம் பேசப்டாது ..ஏன்ன ப்டாதுன்ன ...,ப்டாது..,வந்தீங்களா ஜாலியா படிச்சிட்டு போய்ட்டே இருங்க ...,இல்லன என் நண்பன் ( குரங்கு )வைத்து சுட்டு புடுவேன் ஹா ஹா ஹா .

ஓகே ஸ்டார்ட் கும்மி ..., .

எதிர் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எதிர் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 செப்டம்பர், 2010

குவார்ட்டர் - கட்டிங் - டெர்ரர் -பாண்டி

நீங்கள் எப்பொழுதாவது உங்கள் குவார்ட்டர் பாட்டில்லை ராவாக அடித்து விட்டு தலை வேகமாக சுழல்வதை உணர்ந்து இருக்கிறிர்களா. உங்கள் தொண்டை குழியிலிருந்து
வயிற்றின் மைய பகுதி வரை ஒரு எரிச்சல் எழுந்து உங்கள் உடல் முழுவது பரவுவதை உணர்ந்து இருக்கிறிர்களா? நான் உணர்ந்து இருக்கிறேன்.உடனே ஒரு சொம்பு தண்ணீர் குடித்து
விட்டு படுத்து விடுவேன்.என் பிறந்தோம்? என்ன சாதித்தோம் என்ற கேள்வி அப்போழ்துதான் எழும் ..,மேலும் சம்மட்டியால் அடிக்கும் .உடலில் உள்ள ஒவொறு திசுவும் இந்த கேள்விஎதிரொளிக்கும் பொழுது எனக்குள் இருக்கும் நான் விடையறியாது...அதனால் மறுபடியும் ஒரு குவாட்டர் அடித்து விடுவேன் ..,

அந்த கேள்விக்கு விடைகான நான் தேடிய தேடலில் கிடைத்தது வெறும் காலி பாட்டில்களும் ,வாட்டர் பாக்கெட் கவர்களும் தான்.எந்த திசையில் தேடுவது என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் என் தேடுதலின் தீவிரம் அதிகரித்தது.ஆனால் உள் எறியும் தீயின் வேகம் குறைந்ததது . அந்த போதையிலே எழுந்தேன் ...,மணி பார்த்தேன் 9 .55 p .m ஓடினேன் ,ஓடினேன் ..

கடை சாத்திவிட்டர்கள்....,


கடைகள் பல மாறி சரக்கை தேடினேன். சரக்கு கிடைக்கவில்லை ஆனால் எரிந்து கொண்டு இருந்த தீயின் வேகம் அதிகரித்தது.மனம் தேடலை அதிகரித்தது சரக்குவெள்ளத்தில் ஆக்ரோஷமாக நீந்தி கொண்டு இருந்தது. முயற்சியை சற்றும் கைவிட முடியாமல் தேடினேன் .

ஆ.... அதோ ஒருவன் தன்னதனியாக நிற்கிறான் ..,இருக்கிறதா கேட்டேன் ...இருக்கு ஆனால் 100 ருபாய் என்றான் .சரி தா என்று வாங்கி விட்டேன். இனி கவலை இல்லை கவலை இல்லாமல் சரக்கு அடிக்கலாம் என்று என்னி இருந்த நேரத்தில்......,எனக்குள் எதோ ஒரு மாற்றம். எதோ ஒன்றை உணர்கிறேன். முன்பிலும் அதிகமாக.யோசித்தேன் .

ஆங் ..சைடு டிஷ் வாங்க மறந்து விட்டேன் ..,அது தான் என்னுள் மாற்றத்தை உண்டு பண்ணியது ..,வாங்கினேன் ...,(ஊறுகாய் ).பாட்டிலை திறந்தேன் .அந்த பொன்னிற வேர்வையை (சரக்கு தான் பாஸ் )சிறிது தண்ணி ஊற்றி பருகினேன் அது தொண்டை குழியை அடைந்து அங்கிருந்து பள்ளத்தை நோக்கி பாயும் வெள்ளம் போல் நாடி நரம்பு எல்லாம் தீ குழம்பாய் பாய்கிறது.போதையில் படுத்து விட்டேன் .காலையில் எழுந்தேன் ...,கடிகாரத்தை பார்த்தேன் ...,மணி 9 .45 AM ..,அவசரம் அவசரமாக முகத்தை அலம்பி சரக்கு வாங்கசென்றேன் ...,இதே போல் போதையோடு வாழ்வதற்கு
இயற்கையிடம் என் மனம் இரஞ்சியது


டிஸ்கி : சரக்கு வாங்க கடைசி நிமிடத்தில் போவோர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்