தளத்தை பற்றி

இது பனங்காட்டுநரி எந்த சலசலப்புக்கும் சலனபடாது ...,ஊ ஊ ஊ

இந்த ஓசி ப்ளாக் ஸ்பாட்டுக்கு வந்திருக்கும்,வாசக பெருமக்களே ,இலக்கிய ஆர்வலர்களே ,இனிய தமிழ் மக்களே மேலும் என் உயிரினும் மேலான என் ரத்தத்தின் ரத்தங்களே (பயங்கர கைதட்டல் )..,இந்த தளத்தில் நொந்னை பேச்சு எல்லாம் பேசப்டாது ..ஏன்ன ப்டாதுன்ன ...,ப்டாது..,வந்தீங்களா ஜாலியா படிச்சிட்டு போய்ட்டே இருங்க ...,இல்லன என் நண்பன் ( குரங்கு )வைத்து சுட்டு புடுவேன் ஹா ஹா ஹா .

ஓகே ஸ்டார்ட் கும்மி ..., .

பதிவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 செப்டம்பர், 2010

என்னை பாதித்த பதிவர்கள்

நான் கிட்டதட்ட ஓராண்டு காலமாக பதிவுலகத்தில் வாசகனாய் இருந்து ஒரு சிலர் உசுபேத்தி விட்டதால் பதிவு எழுத வந்தேன் .நான் மிக சிலரின் பதிவுகளை மட்டுமே படித்து வந்த தாக்கமோ அல்லது நான் படித்த ஆசிரியர்களின் எழுத்துகளோ என்னால் எழுத முடியவில்லை .எழுத்துக்கள் அவர்களை போல் கோர்வையாகவும் சுவையாகவோ இருக்காது என்பதது மட்டும் வெள்ளிடை மலை .என்னக்கு முதன்முதலில் அறிமுகமானது சாரு நிவேதிதாவின் வலைமனை தான்.பதிவுலகத்தில் என் முதல் கமெண்ட் கிரி ப்ளோகில் தான் போட்டேன் ...எப்படி தமிழில் தட்டச்சு பண்ணுவது என்று அவர் தான் சொல்லி குடுத்தார் ..தேர்ந்த பத்திரிகையாளர் போல எழுதுவார் ..ஊருக்கு வந்து எனக்கு போன் செய்த முதல் பதிவர் அவர்தான் . அதிலிருந்து ஒவ்வருவரை பிடித்தேன்.அதில் வால்பையனும் ,ராஜனும் என்னை நிறைய யோசிக்க வைத்த பதிவர்கள்.

அதிலிருந்து தான் எங்கள் தானை தலைவர் பட்டாபட்டியின் வலைபூ கண்ணில்பட்டது .என்னடா இது பேரே வில்லங்கமா இருக்கேன்னு தான் படித்தேன் .ஆஹா அவருடைய நக்கல் ,நையாண்டியில் நம்முடைய அரசியல் வியாதிகளின் டவுசெரை கிழித்து தொங்க போட்ட பதிவுகளை பார்த்ததும் இதை தான் இவ்வோளவு நாள் மிஸ் பணிடோமே ஒரு பீலிங் .இந்த போஸ்ட் என்னை மிகவும் பாதித்தது ஏனென்றால் அதிலிருந்த டீலிங்கே வித்தியாசமாய் இருந்தது ...,அப்புறம் என்னோட நண்பர்களுக்கு அறிமுகபடுத்தினேன் ..யாருடே இந்த ஆளு இவ்வளோ தில்லா எழுதுறான் ...,போன் நம்பர் இருக்கா என்று கேட்கும் அளவுக்கு போய்டிச்சு .இப்போ மனுஷன் இந்தியாவுல தான் இருக்கு ..ஒரு மெயில் கூட காணோம் ..g talk ல invite போடிருகேன் ...வந்ததுன்ன முதல்ல சோனா ஏன் ஆஸ்திரேலியா போனான்னு கேக்கணும்

அடுத்து நம்ம வெளியுரு சைந்தவி பக்கங்கள் படிச்சிட்டு நிஜமாவே அதிலிருந்து என்னால் இன்னும் மீளவே முடியலை.EXCELLENT காதல் கடிதம் அது மிகை படுத்தி சொல்ல வில்லை புல் போதைல அந்த கடிதத்தை படிச்சுட்டு ஒரே பீலிங் சா போச்சு ....,சரி ஒரு லூசுதனமா பின்னூட்டம் போடலாம்னு போட்டா ஒரே வெட்டு ,தலை துண்டா போய்டுச்சி ..இந்நாட மனுஷன் இப்படி கோப படுரரேனு பார்த்த எங்க தலைவர் குலசாமி பட்டா அங்கு அறிவுரை வழங்குச்சு ..இங்கே அருமை ,வாழ்த்துக்கள் என்று பின்னோட்டம் இட்டால் அது வன்முறையாக கருதப்படும் என்று .அப்புறம் தான் தெரிஞ்சுது இது சும்மா ஜாலியா போட்டு தள்ற கோஷ்டி னு...,

நான் நிறைய புனைவுகள் ,கதைகள் ,கட்டுரைகள் ,வாழ்கை வரலாறுகள் படித்திருந்தாலும் சந்தர்பம் சூழ்நிலைக்கு ஏற்ப நக்கல் நையாண்டியுடன் எழுத்துகளை எழுத நம்முடைய பட்டாபட்டியை தவிர இந்த பதிவுலகில் யாருமே எழுதவில்லை ..,நான் மிகை படுத்தி சொல்கிறேன் என்று சொன்னால் http://pattapatti.blogspot.com/2010/06/blog-post_18.html பதிவையும் , http://pattapatti.blogspot.com/2010/07/blog-post.html பதிவையும் படித்து பாருங்கள் ..,

அடுத்து நம்ம ஹி ஹி ஹி மங்குனி ..,சும்மா சொல்ல கூடாது இந்த மனுஷன் கண்டு பிடிச்ச முஸ்கி ,குஸ்கி ,கிஸ்கி ,டுஸ்கி எல்லாம் பதிவுலகத்தில் சூப்பர் ஹிட் ...அதுவும் அந்த ப்ளோக ஓபன் பண்ண உடனே புலிகேசி (வடிவேலு ) ஸ்டில பார்த்தாலே தன்னால சிரிப்பு வந்துடும் ...அதுவும் அந்த கமெண்ட்ஸ் பாக்ஸ் ல இருக்கும் வடிவேலு படத்துக்கும் அது சொல்ற பதிலுக்கும் சூப்பரா மேட்ச் ஆகும் ...இதுக்காகவே அதை ஓட்டணும் போல இருக்கும்..அதுனால தான் அது ப்ளோக்ல என்னுடைய கமெண்ட் அதிகமா இருக்கும் ...அதுவும் மங்குனி சொன்ன ஒரு கமெண்ட்(வெளியுரு பதிவுல ) நினைச்சு நினைச்சு சிரிப்பேன் இப்பொழுதும் ...அது "" பட்டா பட்டியை ANONYMOUS ஆக்கின பெருமை உன்னையே சேரட்டும் வெளியுரு "".


பதிவு எழுத ஆரம்பித்தவுடன் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள் எல்லோருமே g -talk வழியாகத்தான் ...நம் ,ஜெய்,அருண் பிரசாத் ,டெர்ரர் பாண்டி ..போன்றவர்கள் இந்த மாதிரி ஆட்களால்தான் மனதின் இறுக்கமும் ,வாழ்கையின் பிரச்சனைகளும் மறந்து சில மணி நேரங்கள் சந்தோஷமாக இருக்க முடிகிறது .இவர்கள் ஊருக்கு வந்தால் ஒரு போன் செய்யாமல் போக மாட்டார்கள் என்பது என் எண்ணம் .

டிஸ்கி : மன்குனிக்கு ஒரு எதிர் பதிவு எழுதி ஒன்னு draftla இருக்கு...தற்காலிகமா அதை நிறுத்தி வைத்துள்ளேன் ..,இதில் ஏதேனும் குறை இருந்தால் தயவு செய்து அதை கண்டும் காணாமல் வோட்டு போட்டு பின்னோட்டங்கள் இடுங்கள் ராசா ..,

டிஸ்கி 2 : இந்த இந்த னு லிங்க் குடுபீங்கலே எப்படியா அது ..,ஒரு மெயில் விடவும்