டிஸ்கி 01 : நாட்ல வெல்லாமை எந்திரனால தான் சரியாய் விலைல ,லூயிஸ் பனுவல் ,விட்டோரியா டி சிக்கா,போன்ற டைரக்டர் படம் எந்திரனலதான் தடை படுது சொல்றவங்க தயவு செய்து ஒன் ஸ்டேப் பேக் போய் வேற ப்ளாக் படிங்க ...,மீறி படிச்சிட்டு புடிக்கலைன்ன மைனஸ் வோட்டு போட்டுட்டு போய்டுங்க ...,படிக்காதீங்க .

ரஜினி ....,இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத பெயர் .நான் இவருக்கு மிக பெரிய ரசிகனானது என்னுடைய 7 வது வயதில் .எங்கள் ஊர் டென்ட் கொட்டாயில் (தியேட்டர் பேரு வேந்தர் ) இவர் படம் பாயும் புலி படம் பார்த்தேன் ..யப்பா.., அந்த படத்துல வந்த சண்டையும் ,ஸ்டைலும் ரொம்ப புடிச்சிது .ரெண்டு நாள்ல மறந்து போச்சி .அப்புறம் இன்னொரு படம் பார்த்தேன் .....,யப்பா சாமி இன்னா ஸ்டைல் ,இன்னா நடை ,இன்னா மேனரிசம் ..,சொக்கி போய்ட்டேன்..படம் பேரு மூன்று முகம் .அந்த படத்துல வர்ற அலெக்ஸ் பாண்டியனை இப்பவும் நினைச்சிகிட்டனா ஒரு பிரெஷ்நெஸ் வரும் .அது தான் ரஜினி .

ஜானி படத்துல ஒரு பாட்டு சீன் ..,அதுல போர்வையை போட்டுகிட்டு தலையை சாச்சிட்டு ஒரு லுக் விடுவார் பாருங்க ...,ஹையோ சாமீ 10 டம்ளர் க்ளுகான் -டி சாப்பிட எபெக்ட் வரும் .இந்த மாதிரி வேற எந்த நடிகரும் என்னக்கு மகிழ்ச்சியையோ ,சந்தோஷத்தையோ கொடுக்க வில்லை .இப்போ கூட அந்த வயசுக்கே போன மாதிரி ஒரு பீலிங் .இது ரஜினியால் மட்டும் முடியும் ..இன்னொருத்தன் பொறந்து வந்தாலும் இந்த அளவுக்கு மாஸ் இருக்குமான்னு சந்தேகம் தான்.

34 வருஷம் அவர் உழைத்த உழைப்பு (அது தனித்துவமானது ) தான் அவரை இன்று யாருமே எட்ட முடியாத அளவு மலை உச்சியில் வைத்துள்ளது .அந்த மனிதனின் இயல்பான நடிப்புக்கு நான் என்றுமே ரசிகன் ...,முள்ளும் மலரும் ,ஜானி ,புவனா ஒரு கேள்விகுறி ,தப்பு தாளங்கள் ,தில்லு முள்ளு ,போன்ற எண்ணற்ற படங்களும் ,,,...,ஸ்டைலுக்கு ஹா ஹா ஹா ...,எல்லா படங்களும்.தான்....,குறிப்பா ,ராஜாதி ராஜா ,பாட்ஷா (யப்பா இந்த பட பேர டைப் பண்ணும் போதே ஒரு புத்துணர்ச்சி ) ,பில்லா, மாப்பிள்ளை ,முத்து ,படையப்பா .... இந்த படையப்பா பத்தி ஒரு விஷயம் ,இந்த படத்துல தலைவர் ஒரு காட்சியல துண்ட தூக்கி போட்டு ஊஞ்சல்ல உக்காருவாரு பாருங்க ...,நாங்க எல்லாம் விசிலடிக்றோம் என் நண்பன் மட்டும் எழுந்து நின்னு ,தலைவா தலைவான்னு அழுவுறான்
இப்போ அவன் ஒரு MNC ல சீனியர் மேனேஜர் ...., படம் பாக்கிறதுக்கு நாளைக்கு வர்றான்.

எந்திரன் நாளைக்கே நைட் ஷோ ஆரம்பிக்குது . இப்போ அந்த பழைய சந்தோசம் வந்தாச்சு ...,எங்க ஏரியா பூரா விழாகோலம் தான் ..,ஒவ்வொருத்தன் முகத்திலும் அவ்ளோவு சந்தோசம் ...,எந்திரன் ஆட்டம் ஆரம்பிச்சாச்சு ....,இனிமே பும் பூம் பூம் பூம் ..ரோபோட ...,ரோபோட ...,
டிஸ்கி 02 : இங்க என்னை சந்தோஷபடுத்தின ஒருவரை பத்தி போட்டிருக்கேன் .., கும்மியடிகனும்னா இதுக்கு முன்னாடி இருக்கிற பதிவுல போய் கும்மியடிங்க ..,