சில வருடங்களுக்கு முன் நான் கிண்டியில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தேன் .அங்கு சேர்ந்த முதல் நாளில் இருந்தே என்னக்கும் எங்கள் மானஜெருக்கும் ஒரே லடாய் தான்.அவர் என்ன சொன்னாலும் அதன்படி தான் செய்ய வேண்டும் ..சிறிது மாற்றி செய்தாலும் போச்சு ..உன்னோட அனுபவம் என் வயது என்று சொல்லி திட்டுவார் ...,நான் எப்பொழுதுமே எங்கு சென்றாலும் ஒரு வேலையை கற்று கொண்டு,பின் என்வழியில் அதை சுலபமாக மாற்றி கொள்வேன் ..அதை மற்றவர்களுக்கும் சொல்லிகுடுபேன் ...,இது அவர்க்கு தெரிந்து CONTROL PLAN ல என்ன சொல்லியிருக்கோ அதன் படி செய் ...,என்னடா இது பெரிய லொள்ளா இருக்கே சொந்தமா சிந்திக்கவே விட மாற்றங்களே என்று நொந்து கொண்டு வேலைக்கு சென்று வந்தேன் .
ஒரு நாள் காலை மேனேஜர் குபிட்டு ..அடுத்த மாசம் ஆடிட் வராங்க ..PROCESS டாகுமென்ட் எல்லாம் ரெடி பண்ணி வைக்கணும் ..டாகுமென்ட் எல்லாம் PREPARE பண்ணனும் என்று ஒரு மூணு பேரை நியமித்தார் ...,சரி இனிமே இந்த ஆளு தொல்லை இருக்காதுன்னு ..ரொம்ப SINCEIRA வேலை பார்த்தேன் ..நான் வேலை பார்ப்பதை பார்த்து எனக்கு INCENTIVE எல்லாம் அந்த மூதேவி குடுத்தது....காலைல ஆறு மணிக்கு போவேன் ..இரவு பத்து மணிக்கு தான் வீட்டுக்கு வருவேன் ..தூக்கம் வெறும் ஏழு மணி நேரம்தான் ...இது மாதிரி ஒரு மாதம் ரொம்ப SINCERA வேலை பார்த்தேன் ...
ஆடிட்கு ஒரு நாள் முன் என்னுடுய வேலையெல்லாம் பக்காவாக முடித்து பஸ் ஸ்டாண்டில் நின்ற போது என்னுடன் பணியாற்றிய ஒருவர் ,'''சார் உங்க டீமில் வேலை பார்த்த ஒருவர் செய்த அத்தனை வேலைகளையும் யாரோ COMPUETERIL DELETE செய்து விட்டார்கள்.அவர் ஒ வென்று அழுகிறார்கள் போய் பாருங்கள் என்று சொன்னார் ''..என்னடா இது தலை வலியா போச்சேன்னு பார்த்தா ஒரு பெண் ஊழியர் அழுது கொண்டின்ருந்தார் ...,என்னக்கு பகீரென்று வந்தது ..ஏனென்றால் அவர் செய்த வேலையெல்லாம் ஒரு நாள்ள செய்ய முடியாது ..அந்த மூதேவி(மேனேஜர் ) என்னதான் திட்டும் ..என்னடா பண்றதுன்னு பார்த்து அந்த பெண்ணை வீட்டுக்கு அனுபிச்சு BACK UP எதுனா இருக்கா பார்க்கலாம் என்றால் ....,DELETE பண்ணவன் தவம் மாதிரி அதை செய்திருக்கான்...இரவு பத்து மணிக்கு மனஜேருக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லி அவன் கிட்ட திட்ட வாங்கி ,ஒரு பீர உட்டு வீட்டுக்கு வந்தேன் ...,மறுநாள் ஆடிட்,நான் ஆடிட் வந்தவங்கள பார்த்ததும் நான் கவலையே படலை ..ஏனென்றால் அந்த ஆடிட் டீம் ஹெட் என் CLOSE FREIND ...,அவன் கிட்டே விஷயத்தை சொல்லி விடேன் .அவன் பரவாயில்லை விடு நான் பார்த்துகிறேன் என்று சொல்லி,'''02 NON CONFIRMATION REPORT ''' மட்டும் குடுத்துட்டு போய்ட்டான்.எல்லாருக்கும் சந்தோசம் ,புதுசா CERTIFICATE வாங்கியிருக்கிறோம் என்று ..,ஒரு சில தொழிலாளிகள் மட்டுமே எங்கள் டீமை வாழ்த்தினார்கள் ..,MANAGEMENT ஹ்ம்ம்ம் ..,
அதுக்கபுறம்தான் என்னக்கு ஆப்பு வெய்சாங்க ...,என்னோட ஒவ்வொரு நகர்வுகளை கண்காணித்தான் அந்த மேனேஜர் ..நான் எங்கே போனாலும் வந்து வேவு பார்கிறது அப்புறம் என்னோட சிஸ்டம் ஆராய்ச்சி பண்ணுவது என்று ..சரி சரி நம்மக்கு UPRAISAL போடத்தான் இதெல்லாம் என்று நினைத்துவிட்டேன் ..,
ஒரு நாள் காலை வேளைக்கு வந்ததும் எங்க மேனேஜர் '''உன் வேலை எதுவும் சரில்லை ,நீ இங்கிருந்து கிளம்பலாம் என்று சொன்னார் '''...ஆத்திரம் தாங்கவில்லை...ஏனென்றால் என்னக்கு கீழ் வேலை பார்க்கும் பெண்கள் காது பட சொல்லிவிட்டான் ...,நான் நேராக அங்கேயிருந்து கிளம்பி ஒரு தம்மை பத்த வைத்து கொண்டு என் நண்பனுக்கு போன் செய்து என்னுடைய சாப்பாடு மூட்டை எடுத்து வரசொல்லிவிட்டேன் ..அவன் வந்து குடுத்ததும் அவனிடம் RESIGN லெட்டர் கொடுத்து அந்த மூதேவியிடம் குடுத்து விடும் படி சொல்லி கிளம்பி விட்டேன்...,ஒரு ரெண்டு மாதாம் தண்ட சோறு சாப்பிட்டு விட்டு வேறு வேளைக்கு சேர்ந்தும் விட்டேன் ,,,,
ஒரு நாள் கோயம்பேடில் பஸ் ஸ்டாண்டில் எங்கள் ஆடிட் டீமில் இருந்த ஒரு நண்பனை சந்திதேன்...அப்பொழுது அவனிடம் பேசி கொண்டிருக்கும் போது சொன்னான் ....,அந்த ஆடிட் FILES எல்லாம் நான் தான் DELETE பண்ணினேன் என்று கொஞ்சமும் குற்றஉணர்ச்சி இல்லாமல் சொன்னான் ...ஏன் செய்தாய் என்று கேட்க வில்லை ....,மனிதர்கள் எப்படியெல்லாம் இருக்கிறார்கள் என்று நினைதேன் ...அந்த பெண் எப்படி எல்லாம் மன உளைச்சல் பட்டிருக்கும் என்று எண்ணி ,உன் சங்காத்தமே வேண்டாமென்று அடுத்த நொடி கிடைத்த எதோ ஒரு பஸ்சில் ஏறினேன் ..
டிஸ்கி : அந்த கம்பெனி யின் வேலையே அதுதான் CERTIFICATE RENEW பண்ணும் போது ஆட்களை தேர்வு செய்து அவர்களிடம் நன்றாக வேலையை வாங்கி அது முடிந்ததும் வேலையை விட்டு எதாவது காரணம் சொல்லி தூக்கி விடுவார்கள்.